thamizhkrishna

மனிதர் யார்

20.08.2014
ஆலமரம்
1.பள்ளிக் கூட ஆலமரத்தில் நண்பர்களோடு விளையாடுகிறோம்.

ஊருணி
2. ஊருணியில் மீன் பிடிக்கிறோம். ஊரின் மேற்கே மிகப் பிரம்மாண்டமான மலை தெரிகிறது. அடர்ந்த காடுகள் உள்ளன. மலையேற பாதைகளும் தென்படுகின்றன. இந்த மலையை இத்தனை வருடங்களாக எப்படி பார்க்காமல் இருந்தோம் என ஆச்சரியம் கொள்கிறோம்.

கிணறு
3. ஊரின் மேற்கே நேரு தோட்டத்தில் அழகிய படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு தெரிகிறது. தண்ணீர் மிகவும் தெளிவாக படிகம் போன்று உள்ளது. அதில் இறங்கிக் குளிக்கிறோம். பெருமாள் கோவில் முன்புறம் பரந்த கொத்தமல்லித் தோட்டம் காணப்படுகிறது. கொத்துக் கொத்தாக பச்சைப் பசேலென மல்லிப் பயிர் வளர்ந்துள்ளது. மாமாவிடம் இது என்ன பயிர் எனக் கேட்கிறோம்.நமக்கேவளர்ந்துள்ளது. மாமாவிடம் இது என்ன பயிர் எனக் கேட்கிறோம். நமக்கே தெரியுமே, பின் எதற்கு மாமாவிடம் கேட்கிறோம் என நினைத்துக் கொள்கிறோம். மேற்கே இன்னும் சற்று தள்ளி பெரிய ஓடையொன்று இருக்கிறது. தண்ணீர் கொஞ்சமாக ஓடுகிறது. கருவேல மரங்களாக உள்ளன. ஓடைக் கரையில் ஒரு கிணறு இருக்கிறது. கிணற்றில் இரு ஆண்கள் குளிக்கிறார்கள். ஒருவருக்கு பெண் போல் மார்பு பெரியதாக இருக்கிறது. இருவரும் முத்தமிடுகிறார்கள். அதிர்ச்சியில் கண் விழிப்பு வந்துவிட்டது.

பால் கெண்டை

4.ஊரின் கிழக்குக் கண்மாயில் படிக்கட்டு போன்ற அமைப்பில் தண்ணீர் ஓடுகிறது. பால் போன்ற தண்ணீர். காவிரியிலிருந்து வருவதாகச் சொல்கிறார்கள். பெரிய நீரோடை ஊரின் வடக்கேயிருந்து வருகிறது. படிக்கட்டு தண்ணீருக்குக் கீழே நூல்வலை வைத்து மீன் பிடிக்கிறார்கள். வலையை இழுத்துச் செல்லாமல் இருப்பதற்காக அதனுள் பெரிய கற்களை வைத்திருக்கிறார்கள். அயிரை மீன்கள்

சத்திய யுகம்

சத்திய யுகம் நாம் வாழும் இந்தப் பூமி மிகவும் செழிப்பானது. கோடானகோடி உயிர்க்குலங்கள்...

Read More

மனிதர் யார்

மனிதர் யார் 20.08.2014ஆலமரம்1.பள்ளிக் கூட ஆலமரத்தில் நண்பர்களோடு விளையாடுகிறோம். ஊருணி2. ஊருணியில் மீன்...

Read More

தமிழர் யார்

தமிழர் யார் இன்றைய உலகம் எப்படி இருக்கிறது?  இந்திய மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ...

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top